கோலாலம்பூர், ஜூன்.01-
அடுத்து வரும் தேர்தல்களில் பாஸ் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்தால், அக்கட்சிக்கு அதற்கான முழு உரிமையும், சுதந்திரமும் உள்ளதாக பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஃபைஸால் அஸுமு தெரிவித்துள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்குள் கட்சி இயந்திரங்களை வலுப்படுத்துவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, எதிர்காலத் தேர்தல்களில் பாஸ் மற்றும் பெர்சாத்து தனித்து போட்டியிடக்கூடும் என்று பாஸ் தகவல் பிரிவு தலைவர் அஹ்மாட் ஃபாட்லி ஷாரி நேற்று பரிந்துரைத்தார்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக இன்று கருத்துத் தெரிவித்துள்ள ஃபைஸால், மலாய் சமூகத்தின் நலன் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் பாஸ் அம்முடிவை எடுக்கும் பட்சத்தில், அதைத் தடுக்க தங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், பாஸ் தனித்து களமிறங்கும் சூழலில், பெர்சாத்துவுடன் இணைந்து செயல்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தயாராக இருப்பதாகவும் ஃபைஸால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








