Jun 6, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மாநிலத் தேர்தலில் மலேசிய இந்திய மக்கள் கட்சி 4 தொகுதிகளில் போட்டி
அரசியல்

ஜோகூர் மாநிலத் தேர்தலில் மலேசிய இந்திய மக்கள் கட்சி 4 தொகுதிகளில் போட்டி

Share:

இஸ்கண்டார் புத்ரி, மே.31-

ஜோகூர் மாநிலத் தேர்தலில், மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சின்னத்தில், நான்கு தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து MIPP தலைவர் பி. புனிதன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஸ், பெர்சத்து மற்றும் கெராக்கான் உள்ளிட்ட பெரிக்காத்தான் கூட்டணியின் உயர்மட்ட தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நான்கு தொகுதிகள், அடுத்த மாநில அரசாங்கத்தை அமைப்பதில் PN-க்கு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோகூரில் உள்ள 56 தொகுதிகளிலும் PN போட்டியிடும் நிலையில், அதில் 4 தொகுதிகள் MIPP-க்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2024 -ஆம் ஆண்டு, ஏப்ரலில் பெரிக்காத்தான் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்த MIPP, வரும் ஜோகூர் மாநிலத் தேர்தலின் மூலம் முதல் முறையாக கூட்டணியின் உறுப்பினராக தேர்தல் களத்தை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சர்ச்சை: புதிய ஆட்சியாளராக துங்கு நாட்சருதீன் பிரகடனமா?

நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சர்ச்சை: புதிய ஆட்சியாளராக துங்கு நாட்சருதீன் பிரகடனமா?

மக்களுக்கு நன்றி கூறி மீண்டும் ஆதரவு கோருகிறார் ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் எஸ். வீரப்பன்

மக்களுக்கு நன்றி கூறி மீண்டும் ஆதரவு கோருகிறார் ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் எஸ். வீரப்பன்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியல் ஒரு வாரத்திற்கு முன்பே வெளியாகும் – ஸாஹிட் ஹாமிடி

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியல் ஒரு வாரத்திற்கு முன்பே வெளியாகும் – ஸாஹிட் ஹாமிடி

ஜோகூர் தேர்தல்: வேட்பாளர் பட்டியல் பரிசீலனை

ஜோகூர் தேர்தல்: வேட்பாளர் பட்டியல் பரிசீலனை

ஜோகூர் மாநிலத் தேர்தல் மத்திய அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ காலித் நோர்டின் உறுதி

ஜோகூர் மாநிலத் தேர்தல் மத்திய அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ காலித் நோர்டின் உறுதி

ஜோகூர் தேர்தல்: 56 தொகுதிகளிலும் போட்டியிட பெரிகாத்தான் நேஷனல் தயார்

ஜோகூர் தேர்தல்: 56 தொகுதிகளிலும் போட்டியிட பெரிகாத்தான் நேஷனல் தயார்