Jun 16, 2026
Thisaigal NewsYouTube
"அன்வாருக்கே எங்களின் முழுமையான ஆதரவு" - கிளந்தான் பிகேஆர் திட்டவட்டம்
அரசியல்

"அன்வாருக்கே எங்களின் முழுமையான ஆதரவு" - கிளந்தான் பிகேஆர் திட்டவட்டம்

Share:

கோத்தா பாரு, மே.27-

கிளந்தான் மாநில பிகேஆர் கட்சியானது, அக்கட்சியின் தேசியத் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கே தங்களின் முழுமையான ஆதரவை வழங்கப் போவதாகவும், பார்டி பெர்சாமா மலேசியா கட்சியில் இணையும் எண்ணம் இல்லை என்றும் உறுதியளித்துள்ளது.

இது குறித்து கிளந்தான் மாநில பிகேஆர் செயலாளர் ரஹிம் ஹசான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தின் 14 தொகுதித் தலைவர்களும், அவர்களது குழு உறுப்பினர்களும் பிகேஆருக்கு விசுவாசமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிகேஆர் தலைவர்களான டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகிய இருவரும், அண்மையில் பெர்சாமா கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தாலும் கூட, கிளந்தான் மாநில பிகேஆர் தலைவர்களைப் பொறுத்த வரையில் அவர்களுடன் இணையும் எண்ணம் இல்லை எனத் திட்டவட்டமாக ரஹிம் ஹசான் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், அடுத்த பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து நிலைகளிலும் கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதில் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளந்தான் மாநிலத்தில் முக்கியத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களில் பலர் பதவி விலகி, பெர்சாமா கட்சியில் இணைந்து வரும் சூழ்நிலையில், ரஹிம் ஹசான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

 இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து

இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து