Aug 28, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பி.கே.ஆர்: கட்சியை இழிவுபடுத்தும் முன்னாள் தலைவர்களின் போக்கை டாக்டர் ஸாலிஹா சாடினார்
அரசியல்

ஜோகூர் பி.கே.ஆர்: கட்சியை இழிவுபடுத்தும் முன்னாள் தலைவர்களின் போக்கை டாக்டர் ஸாலிஹா சாடினார்

Share:

கோலாலம்பூர், மே.24-

கட்சியை விட்டு வெளியேறிய முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆதாரமற்ற, உணர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதை ஜோகூர் பி.கே.ஆர் மாநிலத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸாலிஹா முஸ்தஃபா கடுமையாகச் சாடியுள்ளார். இத்தகைய செயல்கள் முதிர்ச்சியற்ற அரசியல் அணுகுமுறை என்றும், அதிருப்திகளை முறையான வழிகளில் கையாளாமல் ஊடகங்களைப் பயன்படுத்தி குழப்பத்தை விளைவிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

சில நபர்களின் வெளியேற்றத்தால் கட்சி பலவீனமடையவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், பி.கே.ஆர் வலுவான தலைமைத்துவமும் விசுவாசமான அடித்தள உறுப்பினர்களுடன் தனது சீர்திருத்தப் பயணத்தைத் தொடர்வதாகக் குறிப்பிட்டார். தனிநபர்களைச் சார்ந்து இல்லாமல் கொள்கைகளை மட்டுமே நம்பி இயங்கும் பி.கே.ஆர், இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களால் பாதிக்கப்படாது என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.

Related News