Aug 28, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் புதிய வியூக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு
அரசியல்

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் புதிய வியூக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு

Share:

கோலாலம்பூர், மே.24-

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் பாஸ் கட்சியின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அந்த அமைப்பு தனது அரசியல் வியூகங்களை மறுசீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பாஸ் கட்சிக்கும் பெர்சத்து கட்சிக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளும் உட்கட்சிப் பிரச்சினைகளும் கூட்டணியின் எதிர்கால நிலைத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.

குறிப்பாக, பாஸ் கட்சியின் தலைமைத்துவமும் பெர்சத்துவின் சில தலைவர்களின் போக்கும் கூட்டணிக்குள் ஒரு பெரிய மாற்றத்தையோ அல்லது புதிய அரசியல் பிளவையோ ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. கூட்டணிக்குள் ஒற்றுமை குறைவது, வரும் பொதுத்தேர்தலில் வாக்காளர்களின் நம்பிக்கையையும் எதிர்க்கட்சிகளின் வலிமையையும் பாதிக்கும் காரணியாக அமையலாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

Related News