Jun 6, 2026
Thisaigal NewsYouTube
"நீங்கள் பெரிக்காத்தான் தலைவர் கிடையாது - கூட்டணி சார்பில் அறிவிப்புகள் வேண்டாம்" - பெம்பான் சட்டமன்ற உறுப்பினர் கண்டனம்
அரசியல்

"நீங்கள் பெரிக்காத்தான் தலைவர் கிடையாது - கூட்டணி சார்பில் அறிவிப்புகள் வேண்டாம்" - பெம்பான் சட்டமன்ற உறுப்பினர் கண்டனம்

Share:

கோலாலம்பூர், மே.31-

பெர்சத்து கட்சித் தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் கிடையாது என்பதால் அவர் கூட்டணியின் சார்பில் தேவையற்ற அறிவிப்புகள் விடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பெம்பான் சட்டமன்ற உறுப்பினர் Dr Yadzil Yaakub தெரிவித்துள்ளார்.

மலாக்காவில் நேற்று நடைபெற்ற அரசியல் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய முஹிடின், வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அனைத்து 28 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும், Ikatan Prihatin Rakyat கூட்டணியில் உள்ள கட்சிகள் பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தில் போட்டியிடலாம் என்றும் கூறியிருந்தார்.

அது குறித்து இன்று கருத்துத் தெரிவித்துள்ள Dr Yadzil, அந்த வகையான அறிவிப்புகளை வெளியிடும் அதிகாரம் முஹிடினுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம், பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட Dr Yadzil, வரவிருக்கும் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் நியமனக் கடிதங்களில் கையெழுத்திடப் போவது முஹிடின் அல்ல என்றும் நினைவூட்டியுள்ளார்.

இந்த விவகாரம் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்குள் புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related News

துங்கு முஹ்ரிஸ் பதவி நீக்கம் முறையற்றது: சைட் இப்ராஹிம் விமர்சனம்

துங்கு முஹ்ரிஸ் பதவி நீக்கம் முறையற்றது: சைட் இப்ராஹிம் விமர்சனம்

நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சர்ச்சை: புதிய ஆட்சியாளராக துங்கு நாட்சருதீன் பிரகடனமா?

நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சர்ச்சை: புதிய ஆட்சியாளராக துங்கு நாட்சருதீன் பிரகடனமா?

மக்களுக்கு நன்றி கூறி மீண்டும் ஆதரவு கோருகிறார் ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் எஸ். வீரப்பன்

மக்களுக்கு நன்றி கூறி மீண்டும் ஆதரவு கோருகிறார் ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் எஸ். வீரப்பன்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியல் ஒரு வாரத்திற்கு முன்பே வெளியாகும் – ஸாஹிட் ஹாமிடி

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியல் ஒரு வாரத்திற்கு முன்பே வெளியாகும் – ஸாஹிட் ஹாமிடி

ஜோகூர் தேர்தல்: வேட்பாளர் பட்டியல் பரிசீலனை

ஜோகூர் தேர்தல்: வேட்பாளர் பட்டியல் பரிசீலனை

ஜோகூர் மாநிலத் தேர்தல் மத்திய அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ காலித் நோர்டின் உறுதி

ஜோகூர் மாநிலத் தேர்தல் மத்திய அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ காலித் நோர்டின் உறுதி