நெகிரி செம்பிலான், ரெப்பா சட்டமன்றத் தொகுதியை 4 ஆவது முறையாக தற்காத்துக் கொள்ள டிஏபி சார்பில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக போட்டியிடும் எஸ்.வீரப்பன், தம்பின் விலேஜ் பகுதியில் நேற்று இரவு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.
11 ஆவது நாளாக தம்பின் விலேஜ்யை இலக்காக கொண்டு அப்பகுதியில் உள்ள வணிகர்கள் உட்பட வாக்காளர்களை சந்தித்த வீரப்பன் தமது தேர்தல் கொள்கை அறிக்கையின் உள்ளடக்கத்தை விளக்கியதுடன் தம்மை ஆதரிக்கும்படி அப்பகுதி மக்களை கேட்டுக் கொண்டார்.
நெகிரி மாநிலத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வீரப்பனின் ரெப்பா தொகுதியின் வெற்றியை உறுதி செய்வதற்கு டிஏபி - யின் பெரும் தலைவரான அந்தோணி லோக், களம் இறங்கி வாக்காளர்களிடம் ஆதரவு கோரினார்.
ரெப்பா தொகுதியில் வீரப்பனுடன் அந்தோணி லோக்கின் வருகை வாக்காளர் மத்தியில் மிகப் பெரிய கவன ஈர்ப்பாக மாறியதுடன் ரெப்பா தொகுதி பிரசாரத்திற்கு வலு சேர்த்தது.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


