Oct 2, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தல்: அம்னோ–பாஸ் பேச்சு சுமுகமாக நடக்கிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தல்: அம்னோ–பாஸ் பேச்சு சுமுகமாக நடக்கிறது

மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ரஃப் வஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மிகவும் சாதகமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

இதற்கிடையே, பாஸ் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங், தேர்தலில் பாஸ் கட்சி தனது சொந்தச் சின்னத்திலோ அல்லது பாரிசான் நேஷனல் சின்னத்திலோ போட்டியிடுவது குறித்து பேச்சு நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், எந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவது, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட ஒத்துழைப்பு தொடர்பான எந்த முடிவும் இதுவரை இறுதி செய்யப்படவில்லை.

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான இந்தப் பேச்சுவார்த்தை, பெரிக்காத்தான் நேஷனல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் தீவிரமடைந்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →