Oct 10, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் – பிரதமருக்கு உண்டாங்களின் நேரடி நினைவுறுத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் – பிரதமருக்கு உண்டாங்களின் நேரடி நினைவுறுத்து

நெகிரி செம்பிலானின் அரசமைப்பு அதிகாரங்களில் தலையிட வேண்டாம் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் சட்டத்துறைத் தலைவருக்கும் மாநிலத்தின் நான்கு உண்டாங்களும் தம்பின் துங்கு பெசாரும் நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிரம்பானில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நெகிரி செம்பிலான் அரசமைப்புச் சட்டத்தின் 10 மற்றும் 11ஆவது பிரிவுகளின்படி, மாநில ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் மற்றும் பதவி நீக்கும் அதிகாரம் தங்களுக்கு மட்டுமே இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மத்திய அரசின் ஏஜென்சிகளைப் பயன்படுத்தி மாநில நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் பிரதமர் எடுக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், துங்கு நஸாருடினை 12ஆவது யாங் டி-பெர்துவான் பெசாராகத் தேர்ந்தெடுத்தது தொடர்பாக நெகிரி செம்பிலான் அரசு ஆட்சியாளர்கள் மன்றத்துக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில், துங்கு நஸாருடினுக்கே யாங் டி-பெர்துவான் பெசாரின் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தும் சட்டபூர்வ உரிமை இருப்பதாகவும், மாநில நிர்வாகம் அவருக்கு வழங்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

எனினும், இந்த நிலைப்பாட்டை நெகிரி செம்பிலான் ஆட்சியாளர்கள் மற்றும் உண்டாங்களின் மன்றம் ஏற்கவில்லை. துவாங்கு முஹ்ரிஸ் இன்னும் சட்டபூர்வமான யாங் டி-பெர்துவான் பெசார் என்றும், ஏப்ரல் 19ஆம் தேதி வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் பதவி நீக்கப் பிரகடனம் செல்லாது என்றும் அது தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →