புத்ராஜெயா, ஜூலை 25-
நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலில், அம்னோவும் பாஸ் கட்சியும் ஒத்துழைக்கவுள்ளதாக முன்வைக்கப்படும் ஆருடம் குறித்து, பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி, கவலைக்கொள்ள வேண்டியதில்லை என அமானா கட்சியின் துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் முஜாஹித் யூசோப் தெரிவித்தார்.
அரசியலில் எதிரியாக பார்க்கப்படும் கட்சியினருடன் சந்திப்புகளை நடத்துவது வழக்கமான ஒன்றாகும். அரசியல் ரீதியிலான ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்வதற்காக மட்டும், சந்திப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில்லை.
நாட்டின் நலன் அல்லது இஸ்லாமியர்களின் நலன் கருதிகூட, அத்தகைய சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் எனவும் முஜாஹித் யூசோப் கூறினார்.








