பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 08-
இம்மாதம் 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர் மஹ்கொத்த சட்டமன்றத்தொகுதி இடைத் தெர்தலில் பாரிசன் நேஷனல் , மகத்தான வெற்றி பெறும் என்று muafakat நேஷனல் தலைவர் தன் ஶ்ரீ அன்னுவர் முசா ஆருடன் கூறியுள்ளார்.
கடந்த ஜோகூர் மாநில சட்டமன்ற தெர்தலில் பெறப்பட்ட பெரும்பான்மை வாக்குகளுடன் ஒப்பிடுகையில் பாரிசன் நேஷனல் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று அம்னோ முன்னாள் உச்சமன்ற உறுப்பினரான அன்னுவர் முசா குறிப்பிட்டுள்ளார்.
ஜோகூர் மாநிலத்தில் மஹ்கொத்த சட்டமன்றத்தொகுதி அம்னோவின் பலம் பொருந்திய கோட்டை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார் .








