Aug 28, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டி - பாரிசானை அடுத்து பக்காத்தான் கூட்டணியும் அறிவிப்பு
அரசியல்

ஜோகூரில் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டி - பாரிசானை அடுத்து பக்காத்தான் கூட்டணியும் அறிவிப்பு

Share:

ஜோகூர் பாரு, மே.17-

ஜோகூர் மாநிலத் தேர்தலில், அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடத் தயாராக இருப்பதாக அம்மாநில பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அறிவித்துள்ளது.

நேற்று அம்மாநில பாரிசான் நேஷனல் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, பக்காத்தான் கூட்டணியும் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜோகூர் பாரிசான் நேஷனல் தலைவரும், ஜோகூர் மந்திரி பெசாருமான Onn Hafiz Ghazi, 56 தொகுதிகளிலும் பாரிசான் நேஷனல் போட்டியிடும் என நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், அவரது அறிவிப்பின் காரணமாக தாங்களும் 56 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக ஜோகூர் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அமினோல்ஹுடா ஹசான் இன்று அறிவித்துள்ளார்.

ஜோகூரில் இன்று நடைபெற்று வரும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மாநாட்டில் அவர் இதனை அறிவித்துள்ளார்.

Related News