Oct 24, 2025
Thisaigal NewsYouTube
பிகேஆர் கட்சிக்கு ஸுரைடா ஒரு கோடி ரிங்கிட் செலுத்த வேண்டியதில்லை: ஒரு லட்சம் ரிங்கிட் போதுமானதாகும்
அரசியல்

பிகேஆர் கட்சிக்கு ஸுரைடா ஒரு கோடி ரிங்கிட் செலுத்த வேண்டியதில்லை: ஒரு லட்சம் ரிங்கிட் போதுமானதாகும்

Share:

புத்ராஜெயா, டிச. 11-


பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கட்சியின் நிபந்தனையை மீறி, கட்சிவிட்டு கட்சித் தாவியதற்காக பிகேஆர் கட்சிக்கு ஒரு கோடி ரிங்கிட் இழப்பீட்டுத்தொகையை வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவரும், அம்பாங் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸுரைடா கமாருடினுக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

பிகேஆர் கட்சியின் உத்தரவாத நிபந்தையை மீறியதற்காக அக்கட்சிக்கு ஸுரைடா கமாருடின் , ஒரு லட்சம் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை வழங்கினால் மட்டும் போதுமானதாகும் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ சீ மி சுன் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு கோடி ரிங்கிட் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று கோருவது அதிகப் பட்சமாகும். அது ஒரு நியாயமான தொகையாகவும் இல்லை என்பதில் ஸுரைடா செய்து கொண்டுள்ள மேல்முறையீட்டில் மனநிறைவு கொள்வதாக நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சி வேட்பாளராக அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிப்பெற்றப் பின்னர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையியிலான பெர்சத்து கட்சிக்கு தாவியது மூலம் PKR கட்சியின் நிபந்தனையை மீறிவிட்டதாக ஸுரைடாவிற்கு எதிராக கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில்l, ஒரு கோடி வெள்ளி இழப்பீடு கோரி வழக்கு தொடுத்து இருந்தார்.

இவ்வழக்கை செவிமடுத்த உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அக்தார் தாஹிர்50 ஆயிரம் வெள்ளி வழக்கு செலவுத்தொகையுடன் ஒரு கோடி ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை பிகேஆர் கட்சிக்கு ஸுரைடா வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜுன் 23 ஆம் தேதி தீர்ப்பு அளித்திருந்தார்.

Related News