Mar 4, 2026
Thisaigal NewsYouTube
சபா தேர்தல்: பல்முனைப் போட்டி நடக்கும் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பெட்டிகள் அவசியம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அரசியல்

சபா தேர்தல்: பல்முனைப் போட்டி நடக்கும் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பெட்டிகள் அவசியம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.29-

இன்று சனிக்கிழமை நடைபெற்று வரும் சபா மாநிலத் தேர்தலில், பல தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பெட்டிகள் பயன்படுத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

7 முதல் 12 வேட்பாளர்களைக் கொண்டு பல்முனைப் போட்டி நடைபெறும் தொகுதிகளில், 450 வாக்காளர்களுக்கும் மேல் இருந்தால், இரண்டு வாக்குப் பெட்டிகள் அவசியம் என்று தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் டத்தோ கைருல் ஷாரில் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், 13 முதல் 14 வேட்பாளர்களைக் கொண்டு, பல்முனைப் போட்டி நடைபெறும் இடங்களில், 450 வாக்காளர்களுக்கும் மேல் இருந்தால், மூன்று வாக்குப் பெட்டிகள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை 7.30 மணி முதல், 882 வாக்களிப்பு மையங்களில், 17-ஆவது சபா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது.

1.74 மில்லியன் தகுதி பெற்ற வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்