அலோர் ஸ்டார், செப்டம்பர்.15-
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரின் பெயர், அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என்று அதன் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் உச்சமன்றக் கூட்டத்தில் இது குறித்து தீர்க்கமாக முடிவு செய்யப்படும் என்று முன்னாள் பிரதமரான முகைதீன் குறிப்பிட்டார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு முகைதீன் தலைமையிலான பெர்சத்து கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக அவரின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கு பாஸ் கட்சி ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இந்த முறை, பாஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்று அந்த கட்சி வலியுறுத்தி வருகிறது.