ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக விவாதிப்பதற்கும், தேர்தல் தேதியை முடிவு செய்வதற்கும் தேர்தல் ஆணையமான, நாளை மறுநாள் புதன் கிழமை சிறப்புக்கூட்டத்தை நடத்தவிருக்கிறது.
வேட்புமனுத்தாக்கல் தேதி, வாக்களிப்பு தேதி ஆகியவற்றை நிர்ணயிப்பதற்கு எஸ்பிஆர் தலைவர்தான் ஶ்ரீ அப்துல் கானி சாலெஹ் தலைமையில் சிறப்புக்கூட்டம் நடைபெறவிருப்பதாக அதன் பொதுச் செயலாளர் டத்தோ இக்மைருடின் இஷாக் தெரிவித்தார்.
கெடா, பினாங்கு, கிளந்தான், திரெங்கானு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய ஆறு மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படும் முறை குறித்தும் இந்த சிறப்புக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று இக்மைருடின் இஷாக் குறிப்பிட்டார். இந்த சிறப்புக்கூட்டத்திற்கு பின்னர் அன்றைய தினம் நடைபெறும் செய்தியாளர் கூட்டத்தில் வாக்களிப்பு தேதி, வேட்புமனுத்தாக்கல் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று இக்மைருடின் இஷாக் தெரிவித்தார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


