சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்து இருக்கும் மஇகா மற்றும் மசீச. விற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை அம்னோ எடுத்துக்கொள்ளும் என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஇகாவிற்கும், மசீச.விற்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. ஆனால், அவை போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. அவை போட்டியிடுவதற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை தாங்கள் எடுத்துக்கொள்ளப் போவதாக அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் உத்துசான் மலேசியா நாளிதழுக்கு வழங்கியப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மஇகாவையும், மசீச.வையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்குவீர்களா? என்று ஜாஹிட்டிடம் கேட்ட போது, நடைபெறக்கூடிய பாரிசான் நேஷனல் உச்சமன்றக்கூட்டத்தில் அது குறித்து விவாதிக்கப்படும் என்று மட்டுமே பதில் அளித்தார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


