Sep 24, 2026
Thisaigal NewsYouTube
நீலாய் களத்தில் மிரட்டலான 5 முனைப் போட்டி: தற்காப்பைத் தக்கவைப்பாரா ஜே. அருள்குமார்?
அரசியல்

நீலாய் களத்தில் மிரட்டலான 5 முனைப் போட்டி: தற்காப்பைத் தக்கவைப்பாரா ஜே. அருள்குமார்?

Share:

நீலாய் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பிர் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக ஜே. அருள்குமார் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். நீலாய் தொகுதியில் ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினரான அருள்குமாரை எதிர்த்து மசீச. சார்பில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் லாய் சியன் காங், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் டத்தோ வி. சரவணகுமார் மற்றும் பெர்ஜாசா கட்சியின் ஜமானி இப்ராகிம் மற்றும் ஒரு சுயேச்சை வேட்பாளர் என ஐவர் அணிவகுத்து நிற்பதால், நீலாய் ,மிரட்டலான 5 முனைப் போட்டியைக் கண்டுள்ளது.

எண் 2 என்ற வேட்பாளராக போட்டியிடும் அருள்குமாரை ஆதரித்து பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, புக்கிட் குளுகோர் எம்.பி. ராம் கர்ப்பால் சிங் உட்பட ஜசெக ஆதரவாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.

இந்த சட்டமன்றத் தேர்தல் தேவையில்லாதது. கடந்த 2023 ஆம் ஆண்டு தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுடன் தோழமை கொடுத்து போட்டியிட்ட பாரிசான் நேஷனல் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவை மீட்டுக் கொண்டதால் இந்த தேர்தல் நடைபெறுவதாக அருள்குமார், திசைகளிடம் தெரிவித்தார்.

Related News