Sep 24, 2026
Thisaigal NewsYouTube
சென்னா தொகுதியில் மீண்டும் களமிறங்கும் அந்தோணி லோக்: மசீச வேட்பாளருடன் நேரடி மோதல்
அரசியல்

சென்னா தொகுதியில் மீண்டும் களமிறங்கும் அந்தோணி லோக்: மசீச வேட்பாளருடன் நேரடி மோதல்

Share:

ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சென்னா சட்டமன்றத் தொகுதியைத் தற்காத்துக்கொள்ளும் முனைப்புடன், ஜசெக பொதுச்செயலாளரும் போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக இன்று மீண்டும் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

இன்று காலையில் கோலா கோலா கிளவாங், திவான் பெசார், மண்டபத்தில் நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலில் 49 வயதான அந்தோணி லோக் தனது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களின் உற்சாக முழக்கங்களுடன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

இத்தொகுதியில் அந்தோணி லோக்கை எதிர்த்துப் பாரிசான் நேஷனல் கூட்டணியின் சார்பில் மசீச-வைச் சேர்ந்த ஜோன் சியோ காங் சூன் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இத்தொகுதியில் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

தமது சென்னா சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு நான்காவது முறையாக போட்டியிடும் அந்தோணி லோக், கடந்த 2023 ஆம் ஆண்டு தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாரை 2,200 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.

Related News