Sep 24, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் தேர்தல் களம் 2026: எதிர்க்கட்சிகளின் வியூகங்களைத் தகர்த்தெறிய 36 தொகுதிகளிலும் பக்காத்தான் ஹராப்பான் அதிரடிப் பாய்ச்சல்
அரசியல்

நெகிரி செம்பிலான் தேர்தல் களம் 2026: எதிர்க்கட்சிகளின் வியூகங்களைத் தகர்த்தெறிய 36 தொகுதிகளிலும் பக்காத்தான் ஹராப்பான் அதிரடிப் பாய்ச்சல்

Share:

நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் இன்று அனல் பறக்கும் பரபரப்புடன் நடைபெற்றது. மாநிலத்தின் 36 தொகுதிகளையும் மீண்டும் முழுமையாகக் கைப்பற்றித் தனது ஆதிக்கத்தைத் தக்கவைக்க ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி முழு வீச்சில் களம் இறங்கிய வேளையில், பாரிசான் நேஷனல் 25 தொகுதிகளிலும், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியும் தனது வேட்பாளர்களை நிறுத்தி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இன்று காலை 9 மணி மணி முதல் 10 மணி வரை வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் களமிறங்கியுள்ள அதிரடிப் போட்டியை கொடுத்துள்ளனர்.

நெகிரி செம்பிலான் இடைக்கால மந்திரி பெசாரான டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாரூன் , தனது கோட்டையான சிகாமட் தொகுதியை விட்டு வெளியேறி, இம்முறை லிங்கி சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக அதிரடியாகக் களமிறங்கியுள்ளார். இவரை வீழ்த்தப் பாரிசான் நேஷனல் சார்பில் டத்தோ முகமது ஃபைசல் ரம்லியும், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் டத்தோ ஜம்ரி முகமது சைட்டும் மல்லுக்கட்டுவதால், இத்தொகுதியில் நெஞ்சை உலுக்கும் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

Related News