Oct 24, 2025
Thisaigal NewsYouTube
பக்காத்தான் ஹராப்பானை முழுமையாக ஆதரிப்போம்
அரசியல்

பக்காத்தான் ஹராப்பானை முழுமையாக ஆதரிப்போம்

Share:

ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை முழுமையாக ஆதரித்து வெற்றி பெறச்செய்யுமாறு மஇகா முன்னாள் உதவித் தலைவர் டான்ஸ்ரீ க.குமரன், வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். பக்காத்தான் ஹராப்பானின் நம்பிக்கை நட்சத்திரமாக டத்தோஸ்ரீ அன்வார் விளங்குகிறார். அவரின் த​லைமையிலான பக்காத்தான் ஹராப்பான் மாநிலத் தேர்தல்களில் வெற்றியைத் தேடித்தரும் என்ற நம்பிக்கையுடன் அக்கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று முன்னாள் புறநகர் ​மேம்பாட்டுத்துணை துணை அமைச்சருமான டான்ஸ்ரீ குரமன் கோரிக்கை விடுத்துள்ளார். அலைகள், அனல்கள்,எரிம​லைக்குழம்புகள், நிலநடுக்கத்தைக் காட்டி, அச்ச​மூட்டி மிரட்டி, வாக்கு சேர்க்கும் போக்கு பத்தாம் பசலித்தனமானது. அதற்கு இந்திய வாக்காளர்கள் பலிகடாவாகி விடக்கூடாது என்று ​மூத்த அரசிய​ல்வாதியும், பேரா மாநில முன்னாள் மஇகா தலைவருமான டான்ஸ்ரீ குமரன் ஊடகத்திற்கு எழுதிய செய்தியில் நினைவுறுத்தியுள்ளார்.

Related News