Sep 23, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தானை விட்டு பெர்சாத்து அல்ல, பாஸ் கட்சியே வெளியேற வேண்டும் - முஹிடின் யாசின் கருத்து
அரசியல்

பெரிக்காத்தானை விட்டு பெர்சாத்து அல்ல, பாஸ் கட்சியே வெளியேற வேண்டும் - முஹிடின் யாசின் கருத்து

Share:

கோலாலம்பூர், ஜூலை.26-

பெர்சாத்து உடனான அரசியல் ஒத்துழைப்பை பாஸ் நிறுத்துவதை விட, பெரிக்காத்தான் கூட்டணியில் இருந்து அக்கட்சி விலகுவதே சரியான முடிவு என்று பெர்சாத்து கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனலின் இணை நிறுவனர் கட்சிகளில் ஒன்றாக இருக்கும் பெர்சாத்துவுக்கு, கூட்டணியில் தொடர்ந்து இருப்பதற்கான முழு உரிமை உள்ளது என்றும், அக்கட்சியை யாராலும் வெளியேறுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடனான உறவை முறித்துக்கொள்ளும் முடிவை ஒரு கட்சியானது எடுக்கும் பட்சத்தில், அந்தக் கட்சியே கூட்டணியை விட்டு வெளியேறுவது அரசியல் நடைமுறையாகும் என்றும் முஹிடின் யாசின் விவரித்துள்ளார்.

இதற்கு உதாரணமாக, பாஸ் கட்சி ' Pakatan Rakyat' கூட்டணியில் இருந்து வெளியேறியதையும், பெர்சத்து ' Pakatan Harapan’ கூட்டணியை விட்டு விலகியதையும் முஹிடின் நினைவுபடுத்தியுள்ளார்.

Related News