கோலாலம்பூர், டிச.6-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் எஞ்சிய 6 ஆண்டு கால சிறைத்தண்டனையை அவர் வீட்டில் கழிப்பதற்கு அரசாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, அறிக்கை வெளியிட்டதாக தமக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டை பிரதமர் துறையின் கூட்டரசுப்பிரசேத அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தாபா மறுத்துள்ளார்.
அவ்வாறு கூறப்படும் எந்தவொரு அறிக்கையையும் தாம் வெளியிடவில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நஜீப்பை வீட்டுக்காவலில் தடுத்து வைப்பதற்கு அரசாணை உண்டு என்ற கூறி தகவல் சாதங்களுக்கு தாம் வெளியிட்டதாக கூறப்படும் அறிக்கை பொய்யானதாகும். அவ்வாறு எந்தவொரு அறிக்கையையும் தாம் வெளியிடவில்லை என்று அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தாபா இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.








