Sep 22, 2026
Thisaigal NewsYouTube
  பினாங்கு குத்தகைத் தொகை விவகாரம்: சனுசியின் கோரிக்கையை நிராகரித்தார் சாவ் கோன் இயோவ்
அரசியல்

பினாங்கு குத்தகைத் தொகை விவகாரம்: சனுசியின் கோரிக்கையை நிராகரித்தார் சாவ் கோன் இயோவ்

Share:

பினாங்கு மாநிலத்தின் வருடாந்திர 'குத்தகை' தொகையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கெடா மந்திரி பெசார் சனுசி நோரின் தொடர் கோரிக்கையை பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் நிராகரித்துள்ளார்.

2021-ஆம் ஆண்டு முதல் கெடா அரசு என்ன கோருகிறது என்பதில் தங்களுக்குத் தெளிவு இல்லை என்று கூறிய சாவ் கோன் இயோவ், இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு அல்லது மாநில அரசுக்கு அதிகாரப்பூர்வமாகக் கொண்டு வரப்படும்போது பதிலளிக்கத் தயார் என்றார். கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து ஆண்டுக்கு 300 மில்லியன் ரிங்கிட் கோர கெடா அரசு வரலாற்று ஆவணங்களைத் தயாரித்துள்ளதாக சனுசி கூறியிருந்தார்.

எனினும் பினாங்கின் இறையாண்மை, அரசியலமைப்புச் சட்டப்படி பாதுகாக்கப்பட்டுள்ளது என்று சாவ் கோன் இயோவ் உறுதியளித்தார்.

ஜெர்மனியின் எப்பண்டோர்ஃப் குரூப்' நிறுவனம் 30 மில்லியன் யூரோ முதலீட்டில் பினாங்கில் புதிய உற்பத்தி ஆலையை அமைக்க பினாங்கு மேம்பாட்டுக் கழகத்துடன் குத்தகை ஒப்பந்தம் செய்த நிகழ்வை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சாவ் கோன் இயோவ் இதனை தெரிவித்தார்.

Related News

அரண்மனையில் அன்வார் – துவாங்கு முஹ்ரிஸ் நேருக்கு நேர் சந்திப்பு… ஒரு மணி நேரத்துக்குப் பின் வெளியேறினார்

அரண்மனையில் அன்வார் – துவாங்கு முஹ்ரிஸ் நேருக்கு நேர் சந்திப்பு… ஒரு மணி நேரத்துக்குப் பின் வெளியேறினார்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி தீவிரம்… சட்டமன்றத்தைக் கலைக்க மந்திரி பெசார் கோர வேண்டும் என அமானா வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி தீவிரம்… சட்டமன்றத்தைக் கலைக்க மந்திரி பெசார் கோர வேண்டும் என அமானா வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் சாசன விவகாரம்… மத்திய அரசு தலையிட 10 மலேசிய வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர்கள் வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் சாசன விவகாரம்… மத்திய அரசு தலையிட 10 மலேசிய வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர்கள் வலியுறுத்தல்

மலாக்கா சட்டமன்றம் கலைப்பு… ‘விசில்’ ஒலிக்கக் காத்திருக்கும் உறுப்பினர்கள்

மலாக்கா சட்டமன்றம் கலைப்பு… ‘விசில்’ ஒலிக்கக் காத்திருக்கும் உறுப்பினர்கள்

அந்தோணி லோக்கின் பதவி விலகல் முன்வரவு… ஜசெக மத்தியச் செயலவை முடிவு இறுதியானது

அந்தோணி லோக்கின் பதவி விலகல் முன்வரவு… ஜசெக மத்தியச் செயலவை முடிவு இறுதியானது

ஆட்சிக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்

ஆட்சிக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்