Dec 6, 2025
Thisaigal NewsYouTube
சபா இரண்டு இடைத் தேர்தல்களை எதிர்கொள்கிறது
அரசியல்

சபா இரண்டு இடைத் தேர்தல்களை எதிர்கொள்கிறது

Share:

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்.06-

சபா மாநிலத்தின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து இன்று 7 நாட்கள் ஆகிய நிலையில் அந்த மாநிலம் விரைவில் இரண்டு இடைத் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு இலக்காகியுள்ளது

சபா மாநில அம்னோ தலைவரும், கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவையில் பாரிசான் நேஷனலில் வலிமை மிகுந்த பின் இருக்கை ஆதரவு எம்.பி.யாகவும் திகழ்ந்த டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின், நேற்று வெள்ளிக்கிழமை காலமானார்.

புங் மொக்தாரின் மறைவைத் தொடர்ந்து அவர் எம்.பி.யாக இருந்த கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த லாமாக் தொகுதி ஆகியவற்றில் விரைவில் இடைத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன.

இவ்விரு தொகுதிகளிலும் கட்டாயம் இடைத் தேர்தல் நடத்தியாக வேண்டும் என்கிறார் மலேசிய தேர்தல் ஆணையமான எஸ்பிஆரின் முன்னாள் தலைவரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான டான் ஶ்ரீ அஸார் அஸிஸான் ஹருன்.

அடுத்த பொதுத் தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு குறைந்தபட்சம் இன்னும் இரண்டு வருடங்கள் எஞ்சியிருக்கும் வேளையில் எந்தவொரு தொகுதியும் காலியாகுமானால் அந்த தொகுதியில் இடைத் தேர்தல் கண்டிப்பாக நடத்தியாக வேண்டும் என்று டான் ஶ்ரீ அஸார் கூறுகிறார்.

இவ்விரு தொகுதிகளும் காலியாக விட்டது என்று நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற சபாநாயகர் அதிகாரப்பூர்வமாகக் கடிதம் பெறுவாரோயானால், அது குறித்து சபாநாயகர் அறிவிக்கும் பட்சத்தில் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும் என்று தேர்தல் சட்டம் வலியுறுத்துவதாக டான் ஶ்ரீ அஸார் குறிப்பிட்டார்.

Related News