Oct 30, 2025
Thisaigal NewsYouTube
அம்னோ தலைவரின் உரையை சர்ச்சை செய்யவில்லை/ ஆனால் என்னை குட்டி என்பதா? / நீதிமன்றத்தில் துன் மகாதீர் வாதம்
அரசியல்

அம்னோ தலைவரின் உரையை சர்ச்சை செய்யவில்லை/ ஆனால் என்னை குட்டி என்பதா? / நீதிமன்றத்தில் துன் மகாதீர் வாதம்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26-

அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, ஏழு ஆண்டுகளுக்கு முன் கேலனா ஜெய -வில், நிகழ்த்திய உரை குறித்து தாம் சர்ச்சை செய்யவில்லை. ஆனால், தன்னை மகாதீர் இஸ்கந்தர் குட்டி என்று அழைத்தது தொடர்பிலேயே தாம் சர்ச்சை செய்ய விரும்புவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று வாதிட்டார்.

தனது பூர்வீகத்தை தெரிந்து கொண்டு, தமது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும், / தன்னை அம்னோ உறுப்பினர்கள் வெறுக்க வேண்டும் / என்ற தீய நோக்கிலேயே தம்முடைய நீல நிற அடையாள கார்ட்டை பொதுவில் காட்டி, தம்மை குட்டி என்று அகமட் ஜாஹிட் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, தாம் இந்தியா, கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றும், தாம் ஒரு இந்திய முஸ்லிம் என்றும் தோற்றத்தை ஏற்படுத்தி, தம்மை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே அகமட் ஜாஹிட், குட்டி என்ற வார்த்தையை ஆயுதமாக கையில் எடுத்துள்ளார் என்று அகமட் ஜாஹிட்டின் வழக்கறிஞர் முகமது ஷாருல் ஃபாஸ்லி கமருல்ஜமான் கேள்விக்கு துன் மகாதீர் மேற்கண்டவாறு சாட்சியம் அளித்துள்ளார்.

அகமட் ஜாஹிட் கூறியிருப்பதைப் போல தம்முடைய பெயர் மகாதீர் இஸ்கண்டார் குட்டி அல்ல, அவ்வாறு ஜாஹிட கூறியிருப்பது முற்றிலும் பொய்யாகும். தாம் பிறந்தது முதல் ஒரு மருத்துவராக பட்டம் பெற்ற முதல் தமது பெயர் மகாதீர் முகமட் என்றே விளங்கி வந்துள்ளதோ தவிர மகாதீர் இஸ்கந்தர் குட்டி அல்ல என்று 99 வயதான துன் மகாதீர் வாதிட்டார்.

தம்மை மகாதீர் இஸ்கந்தர் குட்டி என்று கூறியிருப்பது தொடர்பில் துணைப்பிரதமரான அகமட் ஜாஹிட்டிற்கு எதிராக துன் மகாதீர் தொடுத்துள்ள மானநஷ்ட வழக்கு மீதான விசாரணை உயர் நீதீமன்ற நீதிபதி Gan Techiong முன்னிலையில் இன்று தொடங்கிய போது அந்த முன்னாள் பிரதமர் மேற்கண்டவாறு சாட்சியம் அளித்தார்.

Related News