அலோர் கஜா, ஜூலை 24-
கிளந்தான், நெங்கிரி சட்டமன்றத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மக்கள் நலன் சார்ந்த பெரிய திட்டங்களை அமல்படுத்தவும், கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து நிதி சார்ந்த உதவிகள் தேவைப்படுவதாக, அம்னோ கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தூ ஸ்ரீ அஹ்மத் மஸ்லான் வலியுறுத்தினார்.
கூட்டரசு அரசாங்கத்தில் இருக்கும் அம்னோ, நெங்கிரி-யில் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளது. அதில் புதிய திட்டமாக, லிங்கரன் தெங்கா உத்தமா நெடுஞ்சாலை நிர்மாணிப்பும் அடங்கும் என்றாரவர்.
குவா முசாங் புறநகர் பகுதி என்பதால், அவர்களின் அனைத்து தேவைகளையும் கூட்டரசு அரசாங்கத்தால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்பதை வாக்காளர்கள் நினைவில் கொள்ள வேண்டுமெனவும் அஹ்மத் மஸ்லான் கேட்டுக்கொண்டார்.








