புக்கிட் அந்தாரபங்சா சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதிலிருந்து உலு கிள்ளான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட முனைந்துள்ள பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளரும் சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி புசாருமான முகமட் அஸ்மின் அலியை எதிர்த்து, பலம் பொருந்திய வேட்பாளரை பக்காத்தான் ஹராப்பான் களம் இறக்கியுள்ளது. கோலசிலாங்கூர், புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற உறுப்பினராக இரண்டு தவணைக்காலம் பதவி வகித்த ஜுவைரியா சுல்கிஃப்லி யிடம் அஸ்மின் அலி நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். பிகேஆர் துணைத் தலைவராக பொறுப்பில் இருந்த போது மாநில மந்திரி புசார் என்ற முறையில் அஸ்மின் அலி, புக்கிட் மெலாவத்தி தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜுவைரியா சுல்கிஃப்லி ஐ களம் இறக்கினார்.தற்போது தனது அரசியல் குருவை எதிர்த்துப் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு மலேசிய தேசிய பல்கலைக்கழகப் பட்டதாரியான 38 வயது ஜுவைரியா சுல்கிஃப்லி தள்ளப்பட்டுள்ளார். அஸ்மின் அலிக்கு ஜுவைரியா சுல்கிஃப்லி கடும் போட்டியை கொடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


