Mar 4, 2026
Thisaigal NewsYouTube
சபா முதலமைச்சராக இரண்டாம் தவணையாக பதவியேற்றார் ஹாஜிஜி நோர்
அரசியல்

சபா முதலமைச்சராக இரண்டாம் தவணையாக பதவியேற்றார் ஹாஜிஜி நோர்

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.30-

சபா மாநில முதலமைச்சராக டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர், இரண்டாம் தவணையாக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இன்று அதிகாலை 3.05 மணியளவில் கோத்தா கினபாலு, இஸ்தானா ஶ்ரீ கினபாலுவில் சபா ஆளுநர் துன் மூசா அமான் முன்னிலையில் 70 வயதான ஹஜிஜி நோர் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சபா மாநிலத்தின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலில் ஹஜிஜி நோர் தலைமையிலான ஆளும் GRS கூட்டணி 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 73 சட்டமன்றத் தொகுதிகளில் ஆட்சி அமைப்பதற்கு தேவைப்படக்கூடிய குறைந்தப்பட்ச பெரும்பான்மையான 37 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவையாகும்.

இதனை நிறைவுச் செய்வதற்கு வெற்றி பெற்ற 5 சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள், UPKO கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், நம்பிக்கைக் கூட்டணியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் என 38 சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஹஜிஜி நோர் தலைமையிலான GRS கூட்டணி சபாவில் இரண்டாம் தவணையாக ஆட்சி அமைத்துள்ளது.

இதனிடைய சபா மாநிலத்தில் இரண்டாவது தவணையாக GRS தலைமையில் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஹஜிஜி நோருக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். நீண்ட காலமாக அநீதியையும் புறக்கணிப்பையும் சந்தித்த பிறகு, மாற்றத்தை விரும்பிய சபா வாக்காளர்கள் தெரிவித்துள்ள தெளிவான செய்தியை மத்திய அரசாங்கம் மதிப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்