Aug 26, 2026
Thisaigal NewsYouTube
தேர்தல் முறைகேடு மீதான புகார்
அரசியல்

தேர்தல் முறைகேடு மீதான புகார்

Share:

நடந்து முடிந்த கோலகுபு பாரு தேர்தலில் முறைகேடு நிகழ்ந்ததாக கூறப்படும் சம்பவங்களுக்கான ஆதாரங்களை பெரிக்காத்தான் நேஷனல் சேகரித்து வருவதாக அதன் சிலாங்கூர் மாநிலத் தலைவர் அஸ்மின் அலி அறிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பதற்காக இந்த ஆதாரங்களை தற்போது, தாங்கள் திரட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட போதிலும் 16 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் முறைகேட்டிற்கான ஆதாரங்களை திரட்டும்படி பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கேட்டுக்கொண்டு இருப்பதாக அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

Related News