ஜோகூர் பாரு, டிசம்பர்.24-
ஐக்கிய அரபு சிற்றரசுக்கு இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்ட மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று பாதுகாப்பாக நாடு திரும்பினார். மாமன்னரின் சிறப்பு விமானம், காலை 9.20 மணியளவில் ஜோகூர், செனாய் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.
மாமன்னரை ஜோகூர் மாநில அரசு செயலாளர் டத்தோ அஸ்மான் ஷா அப்துல் ரஹ்மான், இஸ்தானா நெகாரா மேற்பார்வையாளர் டான் ஶ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி உட்பட முக்கியக் பிரமுகர்கள், செனாய் விமான நிலையத்தில் எதிர்கொண்டு வரவேற்றனர்.
ஐக்கிய அரபு சிற்றரசு அதிபர் ஷையிக் முகமட் ஸாயெட் அல் நயான் அழைப்பை ஏற்று மாமன்னர், அந்நாட்டிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டார்.








