Oct 27, 2025
Thisaigal NewsYouTube
தெரேசா கோக் - கிற்கு எதிரான கொலை மிரட்டல்  இரண்டு தோட்டாக்கள் குறித்து போலீசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்
அரசியல்

தெரேசா கோக் - கிற்கு எதிரான கொலை மிரட்டல் இரண்டு தோட்டாக்கள் குறித்து போலீசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்

Share:

செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக் - கின் வீட்டின் அஞ்சல் பெட்டியில் ஒரு A4 அளவிலான வெள்ளைத் தாளில் கொலை மிரட்டல் எழுதப்பட்ட கடிதம் உட்பட இரண்டு தோட்டாக்கள் கண்டறியப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, போலீசார் ஒரு விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்.

தெரேசா கோக் வீடு திரும்பிய போது அவரின் வீட்டு அஞ்சல் பெட்டியில் ஒரு கடிதமும் அதனுடன் இரண்டு தோட்டாக்களும் இருந்ததை கண்டறிந்ததை தொடர்ந்து, நேற்று இரவு 9 மணியளவில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கடித உறையில் கொலை மிரட்டல் குறித்த கடிதமும் இரண்டு தோட்டாக்களும் இருந்ததை போலீசார் கண்டறிந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுக்கு‌றி‌த்து குற்றவியல் சட்டம் 507 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக டத்தோ ருஸ்டி முகமட் கூறினார்.

இந்த அச்சுறுத்தலுக்குறிய கடிதத்தை போலீசார் தீவிரமாக எடுத்துக் கொள்வதுடன், இது தொடர்பான விசாரணை இன்னும் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் இதுக்குறித்த ஆருடங்களை பரப்ப வேண்டாம் என்று டத்தோ ருஸ்டி முகமட் பொது மக்களை கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, தமக்கு இத்தகைய மிரட்டல் கடிதம் மற்றும் தோட்டாக்கள் அனுப்பப்படுவதற்கான காரணத்தை குறித்து போலீசார் விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் இச்செயல் தம்மை பெரிதளவில் பாதிப்பு ஏற்படுத்துவதாக தெரேசா கோக் அவரின் முகநூல் அகப்பக்கத்தில் கூறியிருந்தார்.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!