கோலாலம்பூர், அக்டோபர்.28-
உலகத் தலைவர்களின் வருகையுடன் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் கோலாலம்பூரில் வெற்றிகரமான நடைபெற்று முடிந்த 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு குறித்து பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் வெளியிட்டு வரும் அறிக்கைகள் குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்டவை என்று கூட்டரசுப் பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சரின் அரசியல் செயலாளர் ஜி. சிவமலர் வர்ணித்துள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்களின் எதிர்மாறான அறிக்கைகள் அவர்களின் அறியாமையைக் காட்டுகிறது என்று சிவமலர் சாடினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வருகையினால் அவர்களின் சித்தாந்தத்திற்கு மலேசியா அடிபணிகிறது என்று பொருள்படாது என்று சிவமலர் குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தலைமையில் மலேசியா முதிர்ச்சியடைந்த ஒரு நாடு மற்றும் கொள்கை ரீதியாகத் தங்களுக்கென்று தனிப்பட்ட தொடர்புத் திறனைக் கொண்டுள்ளது என்பதற்கு உலகத் தலைவர்களின் வருகை நிரூபிக்கிறது என்று சிவமலர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








