Nov 5, 2025
Thisaigal NewsYouTube
இந்திய சமூகத்திற்கு முகைதீன் துரோகம் இழைந்து விட்டார்:  ராயர் கூறுகிறார்
அரசியல்

இந்திய சமூகத்திற்கு முகைதீன் துரோகம் இழைந்து விட்டார்: ராயர் கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.05-

டான் ஶ்ரீ முகைதீன் யாசின் ஆட்சியில் இந்திய சமூகத்திற்குத் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என்று ஜெலுத்தோங் எம்.பி. ஆர்எஸ்என் ராயர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் தமிழ்ப்பள்ளிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை நிறைய எழுப்புகின்றனர். ஆனால், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடுகள் குறித்து அவர்கள் பேசுவது இல்லை என்று ராயர் குற்றஞ்சாட்டினார்.

பாகோ நாடாளுமன்ற உறுப்பினரான முகைதீன், நாட்டின் பிரதமராக இருந்த போது, குவாந்தான், ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேம்பாடு குறித்து ஒரு முறைகூட பேசியதோ அல்லது விவாதித்ததோ இல்லை என்று ராயர் குறிப்பிட்டார்.

இந்தியர்கள் ஏமாற்றப்பட்டது போதும், இனியும் அவர்களைக் கிள்ளுக்கீரையாக பயன்படுத்த வேண்டாம் என்று முகைதீனை ராயர் கேட்டுக் கொண்டார்.

Related News