Oct 27, 2025
Thisaigal NewsYouTube
தஞ்சோங் காராங் நாடாளுமன்ற தொகுதியில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும் பெர்சாத்து கட்சி வெல்லும்!
அரசியல்

தஞ்சோங் காராங் நாடாளுமன்ற தொகுதியில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும் பெர்சாத்து கட்சி வெல்லும்!

Share:

சிலாங்கூர், மே 31-

சிலாங்கூர், தஞ்சோங் காராங் நாடாளுமன்ற தொகுதியில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும், பெர்சாத்து கட்சியே அங்கு வெற்றி பெறும்.

முன்புபொரு காலத்தில், அம்னோவின் கோட்டையாக திகழ்ந்த அத்தொகுதி, தற்போது, தங்களுக்கு வைப்பு தொகையுடைய தொகுதியாக விளங்குவதாக, பெர்மாடாங் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் பெர்சாத்து தஞ்சோங் காராங் தொகுதி இடைக்கால தலைவருமான நூருல் சியாஸ்வானி நோஹ் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் சட்டமன்ற தேர்தலில், தஞ்சோங் காராங் நாடாளுமன்ற தொகுதிக்கு கீழ் உள்ள பெர்மாடாங் , சுங்கை போரோங் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில், பெரிக்காதான் நசியனால் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஆகையால், இடைத்தேர்தல் நடைபெற்றால், தங்கள் வசமுள்ள இரு சட்டமன்ற தொகுதிகளிலிருந்து நிரந்தர வாக்குகள், தங்கள் கூட்டணிக்கு நிச்சயம் கிடைக்கும் என நூருல் சியாஸ்வானி கூறினார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்-முக்கு ஆதரவை வழங்கியதற்காக தஞ்சோங் காராங் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டத்தோ டாக்டர் சுல்காபெரி ஹனாபி, விளக்கம் அளிக்கக்கோரி, பெர்சாத்து கட்சி இரு வாரக்கெடுவுடன் அவருக்கு கடிதத்தை அனுப்பியிருந்தது.

இன்றுடன் அந்த காலக்கெடு முடிவடைவதால், அவர் உரிய பதிலளிக்கவில்லை என்றால் பெர்சாத்து கட்சியில் அவரது உறுப்பினர் தகுதி பறிபோகுவதோடு, அவரது தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகின்றது.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!