Oct 25, 2025
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சி வேலையை செய்து கொண்டு இருக்கிறார் மசீச தலைவர்
அரசியல்

எதிர்க்கட்சி வேலையை செய்து கொண்டு இருக்கிறார் மசீச தலைவர்

Share:

கோலாலம்பூர், நவ. 26-


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் உறுப்புக்கட்சியாக இருக்கும் மசீச. தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங், தற்போது எதிர்ககட்சி வேலையை செய்து கொண்டு இருக்கிறார் என்று கடுமையாக குற்றஞ்சாட்டப்பட்டார்..

மலேசிய வரலாற்றில் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர், எதிர்க்கட்சியைப் போல் நடந்து கொண்டது இதுவரையில் நடந்தது இல்லை என்று பக்காத்தான் ஹராப்பானின் கம்பார் எம்.பி. சோங் ஸெமின் தெரிவித்தார்.

காரணம், நாடாளுமன்ற நடைமுறை விதியான 36 பிரிவை மேற்கோள்காட்டி, பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லியை , நாடாளுமன்ற உரிமை மற்றும் சுயேட்சை விசாரணைக்குழுவிடம் நிறுத்தப்பட வேண்டும் என்று ஆளும் கட்சியை சேர்ந்த யாருமே கோரிக்கை விடுத்தது கிடையாது என்று சோங் ஸெமின் குறிப்பிட்டார்.

ஆளும் கட்சியின் பணியை ஆற்ற வேண்டிய மசீச தலைவர், தற்போது நாடாளுமன்றத்தில் ஒரு எதிர்க்கட்சி எம்.பி.யைப் போல் செயல்பட்டு வருவது அதிச்சியை அளிக்கிறது என்று அந்த கம்பார் எம்.பி. தெரிவித்தார்.

Related News