யார் அடுத்த மந்திரி பெசார் என முடிவெடுப்பதற்கு முன்பு, அந்த மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதை முதலில் உறுதி செய்ய வேண்டும் என அம்னோ கட்சியின் துணைத்தலைவர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
ஒரு மாநிலத்திற்கான மந்திரி பெசாரை நியமனம் செய்வதற்கான முழு உரிமை அம்மாநிலத்தின் சுல்தானுக்கு மட்டுமே உள்ளது என அவர் தெளிவுப்படுத்தினார். நேற்று நெகிரி மாநிலத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பக்காத்தான் ஹரப்பான் தலைவர் அந்தோனி லோக், ஒருவேளை பக்காத்தான் ஹரப்பான் மீண்டும் வெற்றி பெற்றால், நடப்பில் உள்ள மந்திரி பெசாரான அமினுடின் மீண்டும் மந்திரி பெசாராக நியமனம் செய்யப்படுவார் என கூறியதை ஒட்டி முகமட் ஹசான் இவ்வாறு மெட்ரோ நாளிதழில் கூறியுள்ளத்து குறிப்பிடத்தக்கது.