Dec 10, 2025
Thisaigal NewsYouTube
ஃபுஸியா சால்லேவைச் சாடினார் அந்தோணி லோக்
அரசியல்

ஃபுஸியா சால்லேவைச் சாடினார் அந்தோணி லோக்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.09-

சபா மாநில அரசாங்கத்தில் பக்காத்தான் ஹராப்பான் இணைவதாக ஒரு தலைபட்சமாக அறிவித்ததற்காக பிகேஆர் பொதுச் செயலாளர் ஃபுஸியா சால்லேவை ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கடுமையாகக் சாடினார்.

சபா அரசாங்கத்தில் பக்காத்தான் ஹராப்பான் இணைவதாக ஓர் உறுப்புக் கட்சி என்ற முறையில் ஜசெக.விற்கு எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில், அன்றிரவு நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஃபுஸியா சால்லே, தன்மூப்பான முறையில் ஒரு தலைபட்சமாக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டடார்.

இவ்விவகாரம் குறித்து ஜசெக.விடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்பதைத் தாம் பகிரங்கமாக அறிவிப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

பிகேஆர் பொதுச் செயலாளர் ஃபுஸியா சால்லேவின் இந்தச் செயல் முற்றிலும் தவறானதாகும். இது போன்ற ஓர் அறிவிப்பை அவர் வெளியிட்டு இருக்கக்கூடாது என்று சீனமொழி Podcast-டில் அந்தோணி லோக் தெரிவித்ததாக சீனப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நவம்பர் 29 ஆம் தேதி நடந்த சபா தேர்தலில் பிகேஆர் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிப் பெற்றது. இது போன்ற அறிவிப்புகளை அதிகமான தொகுதிளை வென்ற கட்சிகள் மட்டுமே அறிவிக்க வேண்டும். குறிப்பாக, GRS கூட்டணித் தலைவர் ஹஜிஜி நோர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் தெரிவித்தார்.

Related News