Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பிரதமருக்கு உயரிய விருது: அமைச்சரவை வாழ்த்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிரதமருக்கு உயரிய விருது: அமைச்சரவை வாழ்த்து

கோலாலம்பூர், நவ. 15-


தென்அமெக்க நாடான பெருவின் உயரிய விருதான EL SOL DEL PERU எனும் விருது மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது குறித்து அமைச்சரவை இன்று தனது வாழ்த்துகளை பிரதமருக்கு தெரிவித்துக்கொண்டது.

பெரு நாட்டின் உயரிய கெளரவத்திற்குரிய அந்த பழமை வாய்ந்த உயரிய விருது, மலேசியப் பிரதமருக்கு வழங்கப்பட்டது மலேசியாவிற்கு வழங்கப்பட்ட ஓர் உயரிய அங்கீகாரமாகும் என்று அமைச்சரவை உறுப்பினர்கள் வர்ணித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 13 ஆம் தேதி தலைநகரி லீமாவில் அரசாங்க மாளிகையில் நடைபெற்ற விருதளிப்பு சடங்கில் பெரு நாட்டின் அதிபர் டினா எர்சிலியா போலுராட் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு இந்த உயரிய விருதை வழங்கி சிறப்பு செய்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →