அமானா கட்சியின் தலைவராக முகம்மட் சாபு நீடிக்கிறார். இந்த முடிவை அக்கட்சியின் தேசிய தலைமைத்துவ மன்றம் முடிவு செய்து அறிவித்துள்ளது.
அதே சமயம், துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் முஜாஹிட் யுசோஃப் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் காலமான சலாஹுடின் அயுப் வகித்த பதவியில் பொறுப்பேற்கிறார்.
மூன்று தவித் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சர் டாக்டர் டிசுல்கிஃப்லி அஹ்மாட், கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் டாக்டர் சித்தி மாரியா மஹ்முட், துணை தற்காப்பு அமைச்சர் அட்லி சஹாரி. ஆகியோர் அப்பதவியை வகிப்பர்.








