திரெங்கானு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் கிஜால் சட்டமன்ற உறுப்பினருமான ரஸாலி இட்ரிஸ், பெர்சாத்து கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் தளத்தில் பயணிக்கப் போவதாக சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
பெர்சாத்து கட்சியில் தலைமைப் பொறுப்பில் 10 ஆண்டுகள் இருந்த நிலையில், நேற்று தனது பதவியின் இறுதி நாள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இறைவனின் வழிகாட்டலில், புதிய தளத்தில் தொடர்ந்து பயணிக்கவிருப்பதாகவும் தமது முகநூல் பக்கத்தில் ரஸாலி இட்ரிஸ் தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த ஆகஸ்ட் மாதம் திரங்கானு பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து விலகியதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை.
மேலும், செப்டம்பர் மாத மையப் பகுதியில் மாராங் பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்தும் விலகப் போவதாக அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து, திரங்கானு பெர்சாத்து தகவல் பிரிவு தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளில் இருந்த மேலும் இரு சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








