ஜோகூர் பாரு, ஜூன்.21-
ஜோகூர் மாநிலத் தேர்தல் ஏப்ரல் 2027 க்குள் நடைபெறும் என ஜோகூர் மாநில முதல்வர் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தற்போது தேர்தலை விட மக்களுக்குச் சேவை செய்வதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்குத் தயாராகும் வகையில், ஜூலை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்காளர் மாவட்ட மையத்திற்கும் 10 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார். கட்சிக் குழுவினர், தேர்தல் காலம் வரை காத்திருக்காமல், இப்போதே மக்களுக்குச் சேவை செய்யத் தொடங்க வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.