Aug 27, 2026
Thisaigal NewsYouTube
பெர்சத்து மாநாட்டில் ம.இ.கா. பங்கேற்பு– விளக்கமளிக்க விக்னேஸ்வரன் தயார்!
அரசியல்

பெர்சத்து மாநாட்டில் ம.இ.கா. பங்கேற்பு– விளக்கமளிக்க விக்னேஸ்வரன் தயார்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.07-

பெர்சத்து கட்சியின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் ம.இ.கா. தலைவர்கள் பங்கேற்றது, தேசிய முன்னணி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ ஸாஹிட் ஹமிடியின் அதிருப்தியைத் தொடர்ந்து, பெர்சத்து கட்சி ஒரு எதிர்க்கட்சி என்பதால் இது குறித்து எழுத்து வடிவ விளக்கம் அளிக்குமாறு ம.இ.கா.வுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ம.இ.கா.வின் தேசியத் தலைவர் விக்னேஸ்வரன், இந்தக் கடிதத்தைப் பெற்றதும் விளக்கம் அளிக்கத் தயார் என்று கூறியுள்ளார். ம.இ.கா.வின் இளைஞர் அணித் துணைத் தலைவர் கே. கேசவன், பெர்சத்து இளைஞர் அணி தலைவர் ஹில்மான் இடாமுடன் பெர்சத்து மாநாட்டில் இருப்பது போன்ற புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

Related News