Oct 29, 2025
Thisaigal NewsYouTube
அந்த மெய்க்காவலர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டாரா?
அரசியல்

அந்த மெய்க்காவலர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டாரா?

Share:

கோலாலம்பூர், நவ.5-


ஒரு மாற்றுத் திறனாளியான இ - ஹையிலிங் ஓட்டுநரை தாக்கிய அந்த லான்ஸ் காப்பரல் போலீஸ்காரர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டாரா? அல்லது பதவி இறக்கம் செய்யப்பட்டாரா என்று கெப்போங் எம்.பி. லிம் லிப் எங் இன்று கேள்வி எழுப்பினார்.

லான்ஸ் காப்பரல் தாவ்பிக், நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு, 1000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்ட போதிலும் ஒரு காது கேளாதவரான 47 வயது ஓங் இங் கியோங்கிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு, அந்த போலீஸ்காரருக்கு எதிராக தொழில் ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கெப்போங் எம்.பி.வினவினார்.

தனக்கு நீதிக்கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த 6 மாத காலமாக அந்த மாற்றுத் திறனாளி காத்திருந்தார். இந்நிலையில் குற்றம் இழைத்த அந்தப் போலீஸ்காரருக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று 1000 வெள்ளி அபராதம் விதித்திருப்பதை லிம் லிப் எங் சுட்டிக்காட்டினார்.

அந்த போலீஸ்காரருக்கு மிக குறைந்த தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதைத்கண்டு அந்த மாற்றுத் திறனாளியும், அவரைப் பிரதிநிதித்த மலேசிய காது கேளாதவர் சங்கமும் ஏமாற்றம் தெரிவித்துள்ளது.

Related News