Oct 28, 2025
Thisaigal NewsYouTube
வாக்காளர்களின் மனம் புண்படுவதை தவிர்க்க அம்னோ நடவடிக்கை
அரசியல்

வாக்காளர்களின் மனம் புண்படுவதை தவிர்க்க அம்னோ நடவடிக்கை

Share:

கிளாந்தான், ஜூலை 19-

கிளாந்தான், நெங்கிரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், பரப்புரைகளை மேற்கொள்ள விரும்பும் ஒற்றுமை அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை, அம்மாநில அம்னோ தணிக்கை செய்யவிரும்பும் விவகாரம்.

சம்பந்தப்பட்ட தலைவர்கள், அவர்களது பரப்புரைகளில்,
நெங்கிரி தொகுதி வாக்காளர்களின் மனம் புண்படும் வகையிலான கூற்றுகளை முன்வைப்பதை தவிர்க்கவே, கிளந்தான் அம்னோ அம்முடிவை எடுத்திருக்கலாம் என மலேசிய வட பல்கலைக்கழகம் - UUM-மைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் DR. ருஸ்டி ஓமர் தெரிவித்தார்.

பேரிக்காதான் நசியனால் -லிடமிருந்து நெங்கிரி தொகுதியைக் கைப்பற்ற, அம்னோ இலக்கு கொண்டுள்ளது.

கடும் சொற்களைப் பயன்படுத்தும் தலைவர்களால், அந்த இலக்கு நிறைவேறாமல் போகும் சாத்தியம் உள்ளதால், அம்னோ தலைவர்கள் அச்சம் கொண்டிருக்கக்கூடும் என ருஸ்டி கூறினார்

Related News