நவ. 27-
ஜோகூர் மாநிலத்தைப் போல வாரத்திற்கு நான்கரை நாள் வேலைமுறை திட்டத்தை பேரா மாநில அரசு பரிசீலிக்க இயலாது என்று அதன் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட் தெரிவித்துள்ளார்.
வாரத்திற்கு நான்கரை நாள் வேலை முறையை பரிசீலிப்பதாக இருந்தாலும்கூட, அதனை மிக கவனமாக ஆராய வேண்டிய அவசியம் இருப்பதாக மந்திரி பெசார் விளக்கினார்.
காரணம், இதில் முழுக்க முழுக்க மாநிலத்தின் உற்பத்தித் திறன் சம்பந்தப்பட்டு இருப்பதால், இதனை அவசரப்பட்டு பரிசீலிக்க இயலாது என்று டத்தோஸ்ரீ சாரணி விளக்கினார்.








