Aug 28, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் அன்வர் இப்ராஹிம்
அரசியல்

இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் அன்வர் இப்ராஹிம்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் அழைப்பை ஏற்று நாளை மார்ச் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜாகர்த்தாவிற்குச் சிறப்புப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அது உலகப் பொருளாதாரம், பிராந்திய நிலைத்தன்மையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்துவர்.

உலகளாவிய வர்த்தகப் பாதைகள் மற்றும் விநியோகச் சங்கிலித் தொடரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பதற்றத்தைத் தணிக்கவும் ஒருங்கிணைந்த தூதரக முயற்சிகளை மேற்கொள்ள இருவரும் திட்டமிட்டுள்ளனர் விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News