கோலாலம்பூர், டிசம்பர்.03-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இம்மாதம் அமைச்சரவையில் மாற்றம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் அவ்வாறு செய்யப்படக்கூடிய மாற்றமானது, நாட்டின் சீர்திருத்தத்தை நோக்கி மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு மிகக் கவனமாக மேற்கொள்வார் என்று பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரதமர் மேற்கொள்ளவிருக்கும் அமைச்சரவை மாற்றம் பெரிய அளவில் இருக்காது. மாறாக, இரண்டு தினங்களுக்கு முன்பு காலியாகியுள்ள இடங்களை மட்டுமே பிரதமர் நிரப்புவார் என்று பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் தலைமையிலான அமைச்சரவை அதன் தவணைக் காலம் முடிவுறுவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளன. எனவே அமைச்சரவை மாற்றம் சிறிய அளவிலேயே இருக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.








