அமைச்சரவையில் டிஏபி கட்சி குறைவான மற்றும் சமமற்ற எண்ணிக்கையில் பதவிகளைப் பெற்றது குறித்து அதன் பொதுச் செயலாளர் ஆண்டனி லோக் விளக்கமளித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் துருவமுனைப்பு அரசியல் நிலப்பரப்பு காரணமாக, குறிப்பாக இன மற்றும் மதம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கிக் கட்சி சகிப்புத்தன்மையுடன் இருப்பதைத் தேர்வுசெய்வதனால் மிகவும் குறைவான எண்ணிக்கையிலான பதவிகளை பெற்றுள்ளதாக ஆண்டனி லோக் தெரிவித்தார்.
எதுவாக இருந்தாலும், இந்த அரசாங்கத்தை செயல்பட வைக்க வேண்டும். ஏனெனில் இந்த அரசாங்கம் நமது பல்லின சமூகம் மற்றும் நாட்டின் கட்டமைப்பை நிலைநிறுத்துகிறது என்றும், இவ்விவகாரத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் உறுதியாக இருப்பதாகவும் போக்குவரத்து அமைச்சருமான ஆண்டனி லோக் குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
