குவாந்தான், செப்டம்பர்.28-
பகாங் மாநில பெர்சத்து தலைவர் அப்துல் காலிப் அப்துல்லா, தாம் கட்சியை விட்டு விலகி பாஸ் கட்சியில் சேரப் போவதாக எழுந்த வதந்திகளைப் பரபரப்பாக மறுத்துள்ளார். தமது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், அது பாஸ் கட்சித் தலைவர்களை நோக்கி அவர் கேலியாகச் சொன்ன கருத்து என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
பகாங் பெர்சத்துக் கட்சி நிதிக் குறைபாடும் ஆதரவு இன்றி பலவீனமாக உள்ளது என்றும் கூறப்படும் நிலையில், இந்த வதந்தி வேண்டுமென்றே பரப்பப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். தாம் பெர்சத்து கட்சியில் உறுதியாக இருப்பதாகவும், பாஸ் கட்சியுடன் இணைந்து அடுத்தப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகவும் அப்துல் காலிப் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.